அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த புதன்கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த புதன்கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
கவுகாத்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா சாலையில் போலீசாரின் சோதனைச் சாவடியை குறிவைத்து இந்த கையெறி குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அதனால் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக டிவி சீரியல் நடிகை ஜனாபி சைக்கியா மற்றும் உல்ஃபா அமைப்பைச் சேர்ந்த ராஜ்குரு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிகள், வெடி குண்டுகள் உள்ளிட்டவற்றை சைக்கியாவின் வீட்டில் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
1986ம் ஆண்டு முதலே உல்ஃபா அமைப்பில் ராஜகுரு இருப்பதாகவும், அவர் அப்போது முதலே ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு உதவியாக சைக்கியா இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.