வீட்டிலேயே குவா குவா! கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சுகபிரசவம்! இளம்பெண் ஹேப்பி!!
இப்போதெல்லாம், பிரசவம் என்றாலே, மருத்துவமனைக்கு சென்று விடுகிறோம். அங்கும் எப்போது குழந்தை பிறக்கும் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு மருத்துவர்களை நச்சரிக்கிறோம். ஏனென்றால், சுகப்பிரசவம் பிறக்குமோ அல்லது சிசேரியன் செய்ய வேண்டுமோ என்ற அச்சம் எழுந்துவிடுகிறது.
இதோ, வீட்டிலேயே ஒரு இளம்பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்துள்ள இனிய கதை இது.
ஸ்காட்லாந்தில், 20 வயது இளம் பெண் ஸ்டேசி என்பவர் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு, எந்தவிதமான வலியுமின்றி, செவிலியர் உதவியின்றி மற்றும் ஊசி ஏதும் போடாமல் பெண் குழந்தை பிறந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்போது, அவருக்கு உதவியாக அவரது கணவர் டேவிட் மட்டும் இருந்துள்ளார்.
அந்தப் பெண் குழந்தைக்கு ஷோபியா கிரேஸ் என்று பெயர் சூட்டி, தம்பதியர் டேவிட்- ஸ்டேசி போர்ட்டர் புகைப்படத்துடன் பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.