டீன் ஏஜ் ஜோடிகள் உய்யலாலா... காதலர் தின ஸ்பெஷலாக 9.5 கோடி காண்டம் இலவசம்..!

டீன் ஏஜ் ஜோடிகள் உய்யலாலா... காதலர் தின ஸ்பெஷலாக 9.5 கோடி காண்டம் இலவசம்..!
பாலியல் நோய்களை தடுக்கும் விதமாகவும் இளம் வயதில் கர்ப்பமாதலை தடுக்க விதமாகவும் ஆணுறைகளை வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுலா தளத்துக்கு மிகவும் பிரபலமான நாடு தாய்லாந்து. சிறப்பான தினங்களில், பலரும் விரும்பி செல்ல கூடிய இடம் தாய்லாந்து. 

இந்நிலையில் பிப். 14ம் தேதி உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுவதால்  9.5 கோடி அளவிலான இலவச ஆணுறைகளை விநியோகிக்க தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தம் 7.16 கோடி மக்களைக் கொண்ட தாய்லாந்தில் காதலர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படும். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் விருப்பம் தாய்லாந்து. 
 
தாய்லாந்தில் சிறப்பாக கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு இலவசமாகக் காண்டம் கொடுக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. உடலுறவால் பரவும் நோய்களைத் தடுக்கவும், டீன் ஏஜ் கர்ப்பத்தைத் தடுக்கும் நோக்கத்திலும் காண்டங்களை இலவசமாகத் தர தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

பாதுகாப்பான உடலுறவை ஊக்குவிக்கும் வகையிலும் அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி தாய்லாந்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு சுமார் 9.5 கோடி காண்டம்களை தரத் தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்தில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் போன்ற கருத்தடை தொடர்பான பொருட்களின் விற்பனை மற்ற நாட்களை விடக் காதலர் தினத்தன்று தான் உச்சத்தில் இருக்கிறது. இந்த விவகாரத்தில் முற்போக்கான ஒரு அணுகுமுறையையே தாய்லாந்து அரசு கடைப்பிடிக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் அங்குள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வாரத்திற்கு 10 ஆணுறைகள் வழங்கப்படும். காதலர் தினத்தன்று மட்டுமின்றி அடுத்து ஓராண்டு முழுவதும் வாரம் 10 ஆணுறைகளை வழங்கத் தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது

  • சரியானது
  • காலம் கடந்தது
  • விவாதிக்கலாம்
  • கருத்து இல்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்