அதானி குழும நிறுவனங்களுக்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு கடன் வழங்கியுள்ளன..?

அதானி குழுமத்துக்கான கடன் விவரங்கள் குறித்து வங்கிகளிடமிருந்து ஆர்பிஐ கோருகிறது.
அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பெர்கின் 106 பக்க அறிக்கையால் அதானி குழுமம் கடந்த ஆறு நாட்களில் மட்டும் ரூ.8.30 லட்சம் கோடியை இழந்துள்ளது. அதானி குழுமத்தின் பங்குகள் வேகமாக வீழச்சியை சந்தித்து வருகின்றன. கடந்த ஆறு வர்த்தக தினங்களில் மட்டும் அதானி குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்களின் சந்தைமதிப்பு 43 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளது. பங்குகளின் மதிப்பு சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு 10,000 கோடி டாலர் அதாவது ரூ.8.30 லட்சம்கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, அதானி பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.19.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.10.9 லட்சம் கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதானி குழுமம் தொடர் பங்கு வெளியீட்டை மேற்கொண்டு அதன் மூலம் ரூ.20,000 கோடியை திரட்ட திட்டமிட்டிருந்தது. அதற்கான அறிவிப்பும் கடந்த வாரம் வெளியானது. இந்த தொடர் பங்கு வெளியீடு வெற்றிகரமாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை அதானி குழுமம் திடீரென ரத்து செய்வதாக அறிவித்தது. பங்குதாரர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் அதானி குழுமம் அறிவித்தது.
அதானி குழுமத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து சரிவைக் கண்டு வரும் நிலையில், அந்த குழும நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன், மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பன குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதானி குழுமத்தின் கடன் பத்திரங்களை பிணையாக ஏற்க கிரெடிட்சூயிஸ் மறுத்துவிட்டதையடுத்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய வங்கிகள் அதானி குழுமத்துக்கு ரூ.80 ஆயிரம் கோடி அளவில் கடன் வழங்கியுள்ளன. இது அதானி குழுமத்தின் மொத்தக் கடனில் 38 சதவீதம். எஸ்பிஐ ரூ.21,000 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.7,000 கோடி கடன் வழங்கியுள்ளன. இந்தஸ்இந்த் வங்கி உட்பட பல தனியார் வங்கிகள் அதானி குழுமத்துக்கு அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
