குடியரசு தினம்... இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் குடியரசு தலைவர்

குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் இன்று இரவு உரை ஆற்றுகிறார்.
நாடு முழுவதும் 74-வது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து டெல்லியில் கடமைப்பாதையில் நடைபெறும் கண்கவர் விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடி ஏற்றவுள்ளார்.
பின்னர் நாட்டின் ராணுவ வல்லமையையும், கலாச்சார பெருமையையும் பறைசாற்றும் பிரமாண்ட அணிவகுப்பை அவர் பார்வையிடுகிறார்.
இதனிடையே நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று (புதன்கிழமை) உரை ஆற்றுகிறார். இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் முர்மு இன்று இரவு உரை ஆற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய வானொலி மற்றும் அனைத்து தூர்தர்ஷன் சேனல்களில் அவரது உரை ஒளிப்பரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலம் மற்றும் அனைத்து பிராந்திய மொழிகளிலும் அவரது உரை ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
