ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் நடிகை ஊர்மிளா பங்கேற்பு

ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் நடிகை ஊர்மிளா பங்கேற்பு

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை நடைபயணம்’ மேற்கொண்டு வருகிறார். 

கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் காஷ்மீரில் முடிவடைய உள்ளது.

தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஜம்முவில் நக்ரோதா நகரத்தில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அப்போது நடிகையும் அரசியல்வாதியுமான ஊர்மிளா மடோன்த்கர் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடைபயணத்தை தொடர்ந்தார். 

ஊர்மிளா மடோன்த்கர் கடந்த 2019-ம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து  விலகி 2020ம் ஆண்டில் சிவசேனா கட்சியில் இணைந்தவர். இருப்பினும், தற்போது ராகுல் காந்தியின் நடைபயணத்தில் அவர் கலந்து கொண்டது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமின்றி எழுத்தாளர் பெருமாள் முருகன், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் விகர் ரசூல் வானி ஆகியோரும் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.

ஏற்கெனவே நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்