நாடு முழுவதும் 50 நகரங்களில் 5 ஜி சேவை தொடக்கம்... ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 50 நகரங்களில் தனது ட்ரூ 5 ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது நாடு முழுவதும் 184 நகரங்களில் ஜியோ 5 ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நகரங்களில் வசிக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் 5 ஜி சேவைகளை தங்களின் சாதனங்களில் பயன்படுத்த அழைக்கப்படுவர். ஜியோ ட்ரூ 5 ஜி 1Gbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்தலாம்.
இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள "17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 50 கூடுதல் நகரங்களில் ஜியோ ட்ரூ 5 ஜி சேவைகளை வெளியிடுவதில் நெகிழ்ச்சி அடைகிறோம்.
இந்தியா மட்டுமின்றி உலகிலேயே 5 ஜி சேவை வெளியீட்டில் இது மிகப்பெரியது ஆகும். ட்ரூ 5 ஜி வெளியீட்டை வேகப்படுத்தி இருக்கிறோம்.
2023 புத்தாண்டில் ஜியோ ட்ரூ 5 ஜி சேவைகளின் பலன்களை ஒவ்வொரு ஜியோ பயனரும் அனுபவிக்க வேண்டும். " என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
ஓ.பன்னீர்செல்வம்
-
எடப்பாடி பழனிசாமி
-
எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
-
எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
