திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்... வங்கி பணியாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்... வங்கி பணியாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி பணியாளர்கள்  சம்மேளனம் அறிவித்துள்து. 

ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்,  ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும், தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,  வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 மற்றும் 31ஆம் தேதிகளில் வேலை நிறுத்தத்திற்கு வங்கி பணியாளர்கள்  சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. 

இந்நிலையில், மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை. 

இதனைத்தொடர்ந்து  இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, "பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய வங்கிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

எனவே, எந்த உத்தரவாதமும் அளிக்கப்படாததால், திட்டமிட்டபடி ஜனவரி 30 மற்றும் 31ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும்" என தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்