4 பேர் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்திலுள்ள படகு வீடு ஓன்றை புக் செய்து அதில் தங்கியுள்ளனர்.
சுங்கவாயல் பகுதியில் உள்ள படகு ஜெட்டிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த White Orchid என்ற இந்த படகு வீடு நேற்றிரவு திடீரென நீரில் மூழ்கியுள்ளது.
இந்த படகு நீர் மூழ்குவதை அருகிலிருந்த மற்ற படகு ஊழியர்கள் பார்த்துள்ளனர்.உடனடியாக படகில் இருந்தவர்களை மீட்டுள்ளனர். அதில் ராமச்சந்திர ரெட்டி நீரில் மூழ்கியதில் உயிரிழந்தார்.
அவருடன் வந்த அவரது மகன் ராஜேஷ் ரெட்டி, உறவினர்கள் நரேந்தர், நரேஷ், படகு ஊழியர் சுனந்தன் ஆகிய நால்வரையும் மீட்டு ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படகின் அடிப்பகுதியில் உள்ள பலகை உடைந்ததால் தண்ணீர் படகு வீட்டிற்குள் புகுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது கோட்ரிபண்டியை சேர்ந்த மில்டன் என்பவருக்கு சொந்தமான 'படகு' ஆகும்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.