மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியனாக உயர்த்துவதில் இந்த ஆலோசனைக்குழு முக்கிய பங்கு வகிக்கும்.
டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் தலைமையில் மாநில பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இக்குழு மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியனாக உயர்த்த முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தப் போவதாக அறிவித்திருந்தார்.
அவரது கனவு திட்டத்தை மகாராஷ்டிரா மாநிலமும் பின்பற்றுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பொருளாதார ஆலோசனை குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்.சந்திரசேகரன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.