திருமணத்திற்குத் தயார் - ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி

திருமணத்திற்குத் தயார் - ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
திருமணத்திற்குத் தயார் - ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி

"ஆனால் அந்த பெண்ணுக்கு என் அம்மா மற்றும் என் பாட்டியின் குணநலன்கள் கலந்து இருந்தால் நல்லது"

ராகுல் காந்திபாரத் ஜோடோ யாத்ராவில் மும்முரமாகி விட்டார். இந்த பயணத்தின் போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்த ராகுல் காந்தி, தனது தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி மனம் திறந்திருக்கிறார்.

அப்போது ராகுல்காந்தியிடம் சுவாரஸ்யமாக சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒன்று அவரது திருமணத்தைப் பற்றியது. 

“மணந்தால் எப்படிப்பட்ட பெண்ணை நீங்கள் மணப்பீர்கள்” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ”அந்த பெண் என் அம்மா மற்றும் என் பாட்டியின் குணநலன்களை கலந்து வைத்திருப்பவராக இருந்தால் நல்லது" என பதில் அளித்தார். மேலும் தனது பாட்டியான இந்திரா காந்தியை, ”எனது அன்பு அவர், என் இரண்டாம் தாய்” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அவரது எதிர்ப்பாளர்கள் அவரை 'பப்பு' போன்ற வேறு பெயர்கள் கொண்டு அழைப்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு "நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படமாட்டேன். நீங்கள் என்ன சொல்ல விரும்பினாலும், அதுபற்றி கவலை இல்லை. நான் யாரையும் வெறுக்க மாட்டேன். எனப் பதிலளித்தார். 

மேலும் அவருக்கு விருப்பமான கார் பற்றி கேட்ட கேள்விக்கு, “எனக்கு கார் பழுதை சரிசெய்யத் தெரிந்தாலும் அதை ஓட்ட பெரிதும் விரும்புவதில்லை. என்னிடம் என் அம்மாவின் கார் ஒன்று தான் உள்ளது. 

மோட்டார் பைக் ஓட்டுவது தான் எனக்குப் பிடிக்கும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டியுள்ளேன். ஆனால் எலக்ட்ரிக் பைக் ஒட்டியதில்லை. ஒரு நாள் முயற்சி வேண்டும் எனப் பதிலளித்து, மின்சார வாகனங்களின் உற்பத்தியில் நாடு இன்னும் தனது திறனை மேம்படுத்த வேண்டும். 

மின்சார வாகனங்களின் புரட்சிக்கு ஒரு அடித்தளம் தேவை. நம் நாடு அதில் பின்தங்கி இருக்கிறது. பேட்டரிகள்மோட்டார்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உற்பத்தி செய்வதற்கான அடித்தளம் இங்கு இல்லை என்றும் அப்பெட்டியில் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com