268 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் நேற்று 2 லட்சத்து 36 ஆயிரத்து 919 பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 268 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று 188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19 ஆயிரத்து 230 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.