14 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை; பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் தலைமறைவு..!

14 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை; பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் தலைமறைவு..!
14 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை; பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் தலைமறைவு..!

பிரசவத்தின் மூலம் சிறுமிக்கு ஆண் குழந்தை

ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா பகுதியில் வசிக்கும் ஜெய்ராம் நாயக் (20) என்ற இளைஞர், அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு  செய்துள்ளார். 

இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.  அந்த சிறுமியை இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க  கிராம மக்கள் முயற்சி செய்தனர். 

இதனிடையே அந்த கிராமத்தை விட்டு ஜெய்ராம் நாயக் தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து சிம்தேகாவில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஜெய்ராம் நாயக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிறுமி கர்ப்பமாக இருந்ததால், அவர் பள்ளிக்கு செல்வதையும் பெற்றோர் நிறுத்திவிட்டனர். அதனால் அந்த சிறுமி வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அருகில் உள்ள மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார். அவருக்கு பிரசவத்தின் மூலம் ஆண் குழந்தை பிறந்து உள்ளது. 

14 வயது சிறுமி தாயானது குறித்து போலீசாரும், குழந்தைகள் நல குழுவும் விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com