மோடியின் தாயார் உடல் நிலையில் முன்னேற்றம்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், ஓரிரு நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99). இவர் குஜராத் மாநிலம், காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் இல்லத்தில் வசித்து வருகிறார்.இந்நிலையில், அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி நேற்று மதியம் அகமதாபாத்துக்கு விரைந்தார். விமான நிலையத்திலிருந்து நேராக அவர் தாயார் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று தாயாரை பார்த்தார்.
அங்கிருந்த மருத்துவர்களிடம் தாயாரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை பற்றியும் விசாரித்து அறிந்தார். தற்போது பிரதமர் மோடியின் தாயார் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.