4 லட்சம் சாலை விபத்துக்களில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பு

4 லட்சம் சாலை விபத்துக்களில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பு
4 லட்சம் சாலை விபத்துக்களில்  ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பு

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டில் சாலை விபத்துக்களால் ஏற்படும் இறப்புகள் 1.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

நாட்டில் 2021 ஆண்டில் நிகழ்ந்த  சுமார் 4 லட்சம் சாலை விபத்துக்களில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2019 ஆண்டை காட்டிலும் 2021 ஆம் ஆண்டில்  சாலை விபத்துகளின் எண்ணிக்கை 8.1 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தோர் எண்ணிக்கை 14.8 சதவிகிதம் குறைந்துள்ளது. 
எனினும் 2019 ஆம் ஆண்டுடன்  ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டில் சாலை விபத்துக்களால் ஏற்படும் இறப்புகள் 1.9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதங்களில் நாடு தழுவிய முழு அடைப்பு காரணமாக விபத்துக்கள் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சாலை  விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com