சந்திரபாபு நாயுடு பேரணியில் கூட்ட நெரிசல் - 7 பேர் உயிரிழப்பு

சந்திரபாபு நாயுடு பேரணியில் கூட்ட நெரிசல் - 7 பேர் உயிரிழப்பு
சந்திரபாபு நாயுடு பேரணியில் கூட்ட நெரிசல்  - 7 பேர் உயிரிழப்பு

நெரிசலிலிருந்து தப்பிக்க சிலர் அருகில் உள்ள கால்வாயில் குதித்தனர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கன்டுகூர் என்ற இடத்தில் அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்திற்காக ஊர்வலமாக சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 

இது குறித்து போலீசார் கூறுகையில், "முன்னாள் முதலமைச்சர் வந்தபோது  கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தெலுங்கு தேச தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது நெரிசலிலிருந்து தப்பிக்க சிலர் அருகில் உள்ள  வடிகால் கால்வாயில் குதித்தனர். இதில்  7 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். 

இதனையடுத்து சந்திரபாபு பொதுக்கூட்டத்தை ரத்து செய்தார்.பின்னர் மருத்துவனைக்கு சென்ற அவர் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் என்டிஆர் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com