மயிலாடுதுறையில் கடல் சீற்றம்;கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்!!

மயிலாடுதுறையில் கடல் சீற்றம்;கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்!!

வங்ககடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

 அனைத்து தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தின் இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் கடல் அலைகள் வேகமாக கொந்தளிப்பு சீற்றத்துடன் காணப்படுகிறது. 

மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி, சின்னங்குடி, பூம்புகார், வானகிரி, சந்திரபாடி, மாணிக்கப்பங்கு, குட்டியாண்டியூர்,  பழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமலும் தங்களது உடமைகளையும், பைபர் படகுகுள், விசை படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

கடந்த மாதம் பெய்த அதீத கன மழையால்  கடலுக்கு செல்லாமல் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், தற்போது மாண்டஸ் புயலால் கடலுக்கு செல்லாமல்  மீண்டும் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், விவசாயிகளை பாதுகாக்க கூட்டுறவு வங்கிகள் உள்ளதைப்போல மீனவ மக்களுக்கும் கூட்டுறவு வங்கிகளை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்