இமாச்சலில் வெற்றிபெறும் வேட்பாளர்களை சத்தீஸ்கர் அழைத்து செல்ல காங்கிரஸ் திட்டம்?

இமாச்சலில் வெற்றிபெறும் வேட்பாளர்களை சத்தீஸ்கர் அழைத்து செல்ல காங்கிரஸ் திட்டம்?

குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 182 தொகுதிகளில் 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் குஜராத்தில் இமாலய வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

68 தொகுதிகள் கொண்ட இமாச்சல் பிரதேச மாநிலத்தில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், 25 தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், வெற்றிச் சான்றிதழை பெற்றதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சத்தீஸ்கர் அல்லது ராஜஸ்தான் அழைத்துச் செல்ல அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்க வெற்றி வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை சத்தீஸ்கர் அல்லது ராஜஸ்தான் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.இதற்காக பிரியாகாந்தி இன்று இமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, ஆபரேஷன் தாமரை மூலம் கோவா, மத்திய பிரதேசத்தில் பாஜக செய்ததைபோன்று இங்கும் நடக்கக்கூடாது என்பதற்காக காங்கிரஸ்  கட்சி திட்டமிட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்