இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை..பாஜக பின்னடைவு..!

இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை..பாஜக பின்னடைவு..!

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இமாச்சல பிரதேசத்தில் 68 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.12-ல் தேர்தல் நடைபெற்றது. இமாச்சல பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் தேர்தல் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக இன்று காலை முன்னிலை வகித்து வந்தது. 11 மணி அளவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது.

பாஜக 27 தொகுதிகளிலும், 38 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை இமாச்சல் பிரதேச மாநிலத்தில் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.இதனால் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 38 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால் பெரும்பான்மையை பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக 43 , காங்கிரஸ் 22 , மற்றவை 3 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்