சபரிமலையில் VIP தரிசனம் இல்லை - தேவஸ்தானத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் VIP தரிசனம் இல்லை  - தேவஸ்தானத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சபரிமலையில் VIP  தரிசன முறை இல்லை என்பதை தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவது தொடர்பாக என்ஹான்ஸ் ஏவியேசன் என்ற தனியார் நிறுவனம் இணையதளத்தில் ஒரு விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் ரூ.48 ஆயிரம் கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவையுடன் சன்னிதானத்தில் VIP தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, சபரிமலையில் இதுவரை VIP தரிசன முறை கிடையாது. மறைமுகமாக கோவில் நிர்வாகம் VIP தரிசனத்தை கொண்டு வருகிறதோ என்ற சந்தேகம் பக்தர்களுக்கு உருவானது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. அதை தொடர்ந்து வழக்கு விசாரணையின் போது தனியார் நிறுவனம் இணையதளத்தில் இருந்து விளம்பரத்தை நீக்கியதுடன் மன்னிப்பும் கோரியது.

மேலும் இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அனில்.கே.நரேந்திரன், பி.ஜி.அஜித்குமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவில் கூறியதாவது, சபரிமலை, நிலக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தை மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியான சேவைக்கு பயன்படுத்தக்கூடாது. மண்டல, மகரவிளக்கு காலங்களில் இதனை பயன்படுத்த வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும்.

கேரள போலீஸ் சட்டத்தின் படி சிறப்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாக நிலக்கல் உள்ளது. இது பெரியார் புலிகள் சரணாலயத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த பகுதி சீசன் அல்லாத நாட்களில் வன விலங்குகளின் வாழ்விடமாகவும் விளங்குகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை 12 முறை மட்டுமே ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் அனைவரும் சாதாரண பக்தர்கள் தான். இவர்களில் யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கக் கூடாது. VIP தரிசன முறை சபரிமலையில் இல்லை என்ற நடைமுறையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற யார் தலைமையில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • ஓ.பன்னீர்செல்வம்
  • எடப்பாடி பழனிசாமி
  • எப்படிப் போட்டியிட்டாலும் வெற்றியே
  • எப்படிப் போட்டியிட்டாலும் தோல்வியே

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்