கேரளாவில் பஸ்கள் மோதலில் 5 பள்ளி குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

கேரளாவில் பஸ்கள் மோதலில் 5 பள்ளி குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நள்ளிரவு 12 மணியளவில் வாளையார்-வடக்கஞ்சேரி சாலையில் பயணம் செய்த அரசு பஸ்சும், சுற்றுலா பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகின. 

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ், அரசு பஸ்சை முந்திச் செல்ல முயன்ற போது இரண்டு பஸ்களும் மோதி நிலைதடுமாறி கவிழ்ந்தன. 

இந்த விபத்தில் 5 பள்ளிக் குழந்தைகள் உட்பட 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். 

உருக்குலைந்து கிடந்த பஸ்களின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து பலியானவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டனர். 

மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்