2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து காரில் கடத்த முயன்ற ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான குட்காவை மத்திகிரியில் போலீசார் பறிமுதல் செய்தனர

ஓசூர் தாலுகா மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, சப்-இன்ஸ்பெக்டர் சிற்றரசு மற்றும் போலீசார் தேன்கனிக்கோட்டை சாலையில் கால்நடை பண்ணை அருகில் வாகன சோதனையில் இடம் பிடித்தனர். அப்போது அந்த வழியாக காரை போலீசார் நிறுத்தினர். இதனால் டிரைவர் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான HANS, பான்பராக், பான்மசாலா, குட்கா என மொத்தம் 396 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் ஆகும். தொடர்ந்து குட்கா மற்றும் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, இந்த ஆண்டு மட்டும் மத்திகிரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 18 டன் குட்கா பிடிபட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

“தமிழ்நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துக்கு உங்கள் பதில்

  • சரியான கருத்துதான்
  • வாக்குரிமையை தடுப்பது குற்றம்
  • இது பிரிவினை அரசியல்
  • வாக்குரிமை அளிப்பதில் தவறில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்