இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவும் லம்பி வைரஸ் தொற்றால் அச்சம்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவும் லம்பி வைரஸ் தொற்றால் அச்சம்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவும் லம்பி வைரஸ் தொற்றால் அச்சம்

இந்தியாவில் லம்பி வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 57 ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன. குறிப்பாக பசுக்களை இந்த வைரஸ் தாக்கி வருகிறது.

இந்தியாவில் லம்பி வைரஸ் நோய் தாக்குதலால் இதுவரை 57 ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன. குறிப்பாக பசுக்களை இந்த வைரஸ் தாக்கி வருகிறது. இது தற்போது பல்வேறு மாநிலங்களுக்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

டைகள் ஏற்றுமதியை குஜராத் அரசு தடை செய்துள்ளது. தற்போது வரைக்கும் பால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் கால்நடைகளை இந்த லம்பி வைரஸ் அதிகளவில் பாதித்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பசுக்களை குழி தோண்டி புதைத்து வருகின்றனர். தற்போது வரைக்கும் நாடு முழுவதும்  57,000த்துக்கும் மேலான பசுக்கள் இந்த வைரஸ் நோயால் இறந்துள்ளன. இவற்றில் 37 ஆயிரம் பசுக்கள் ராஜஸ்தானில் மட்டும் இறந்துள்ளன. 

இதுகுறித்து மத்திய மீன்வளம், விலங்குகள் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் கோடாபாய் ருபலா கூறுகையில், ''தற்போது லம்பி வைரஸ் நாட்டில் 6 முதல் 7 மாநிலங்களில் பரவி இருக்கிறது. முக்கியமாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவி இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்திலும் சில பசுக்களை இந்த வைரஸ் தாக்கி இருக்கிறது.  சூழலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாநிலங்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

பசுக்களை வைத்து இருப்பவர்கள் தங்களது பசுக்களுக்கு கோட் பாக்ஸ் தடுப்பூசிகளை (Goat Pox Vaccine) செலுத்திக் கொள்ள வேண்டும். மாநில அரசுகளை இந்த தடுப்பு ஊசி போடுவதற்கு துரிதப்படுத்தி வருகிறோம். குஜராத் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் தொற்று பரவுவது கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில்தான் அதிகளவில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது'' என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com