ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்க வேண்டும் -பிரதமர் மோடி

ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்க வேண்டும் -பிரதமர் மோடி
ஊட்டச்சத்து பற்றாக்குறையை நீக்க வேண்டும்  -பிரதமர் மோடி

பிரதமர் மோடி 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்

பிரதமர் மோடி 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 

இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இதில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, நாட்டின் சுதந்திர தினத்தின்போது, ஹர்கர் திரங்கா எனப்படும் வீடுதோறும் மூவர்ண கொடி ஏற்றும் நிகழ்ச்சியை புதுமையான முறையில் செயல்படுத்தியதற்காக தனது பாராட்டுகளை அவர் தெரிவித்து கொண்டார். 

அமுத பெருவிழா மற்றும் சுதந்திர திருநாளில் நாட்டின் கூட்டு வலிமையை நாம் பார்த்தோம் என கூறினார்.

 சுதந்திர போராட்ட வீரர்களின் முயற்சிகளை கொண்டாட கூடிய சுவராஜ் என்ற நிகழ்ச்சியை தூர்தர்சனில் கண்டு களிக்கும்படியும் பிரதமர் மோடி பேச்சின்போது மக்களிடம் வலியுறுத்தி உள்ளார். 

தொடர்ந்து அவர் பேசும்போது, ஊட்டச்சத்து பற்றாக்குறையில் இருந்து நாடு விடுபட ஜலஜீவன் திட்டம் பெரும் பங்காற்றி வருகிறது. ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும்படி உங்கள் அனைவரையும் நான் கேட்டு கொள்கிறேன். 

நாட்டு மக்கள் மற்றும் நம்முடைய சிறு விவசாயிகள் பயன்பட கூடிய வகையிலான, சிறு தானியங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com