65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

கனடாவில் நடைபெற இருக்கும் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.

இம்மாதம் 22 முதல் 26-ந்தேதி வரை கனடா நாட்டின் ஹாலிபேக்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக சபாநாயகர் மு.அப்பாவு கலந்துகொள்கிறார். 

இதனை தொடர்ந்து சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் இம்மாநாட்டில் நடைபெறும் 'சோகாட்' கூட்டங்களில் கலந்துகொள்கிறார். சபாநாயகர் மு.அப்பாவும், செயலாளர் கி.சீனிவாசனும் மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஆய்வுப் பயணம் மேற்கொள்கின்றனர் 

அதன் பின்பு ஹாலிபேக்ஸ் நகருக்கு சென்றடையவுள்ளார். சபாநாயகர் மு.அப்பாவும், செயலாளர் கி.சீனிவாசனும் மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு 1-9-2022 இரவு 8.30 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். 

இந்த நிலையில் கனடாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ள சபாநாயகர் அப்பாவுவை இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்