தேசிய கொடி விற்பனையால் இந்தியாவிற்கு வருவாய் எவ்வளவு தெரியுமா?

தேசிய கொடி விற்பனையால் இந்தியாவிற்கு வருவாய் எவ்வளவு தெரியுமா?

நாட்டின் 75 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டது. 

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

இதில், வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்தார். அதனை ஏற்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடினர். 

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், சுமார் 30 கோடி தேசியக் கொடிகள் விற்பனையானது என்றும் இதனால், சுமார் ரூ.500 கோடி அளவிற்கு வருவாய் கிடைத்துள்ளது என்றும் அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்