ரேஷன் கடைகளில் தேசியக்கொடிக்கு ரூ.20 வசூலிப்பது வெட்கக்கேடு - ராகுல்காந்தி விமர்சனம்

ரேஷன் கடைகளில் தேசியக்கொடிக்கு ரூ.20 வசூலிப்பது வெட்கக்கேடு - ராகுல்காந்தி விமர்சனம்

ரேஷன் கடைகளில் ஏழைகளை கட்டாயப்படுத்தி தேசியக்கொடி வாங்க சொல்வது வெட்கக்கேடானது என பாஜக அரசை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு சிறப்பாக செய்து வருகிறது. நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி இந்திய மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் முகப்பு படத்தை தேசிய கோடியாக மாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து பிரதமர் மோடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களின் டிபியை தேசிய கோடியாக மாற்றியுள்ளார்.

இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் ஏழை மக்களிடம் ரூ.20 செலுத்தி தேசியக்கொடி வாங்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோவை பாஜக எம்.பியான வருண் காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், இது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது முகநூல் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் “மூவர்ணக் கொடி நமது பெருமை. அது ஒவ்வொரு இந்தியர் மனதிலும் உள்ளது.  தேசியத்தை ஒருபோதும் விற்க முடியாது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் ஏழைகளிடம் 20 ரூபாய் வசூலித்து தேசியக்கொடியை விற்பனை செய்வது வெட்கக்கேடானது. நமது நாட்டின் ஏழைகளின் சுயமரியாதையை பாஜக அரசு வேதனைப்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் இது குறித்து மத்திய அரசு கூறுகையில் “ரேஷன் கடைகளில் ரூ.20 பெற்றுக்கொண்டு தேசியக்கொடி விற்பனை செய்யுங்கள் என எந்த உறவும் பிறப்பிக்கவில்லை. அந்த குறிப்பிட்ட ரேஷன் கடையில் தேசியக்கொடி விற்பனை செய்த ஊழியர்கள் அரசின் விதிமுறைகளை மீறியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாட்டில் உள்ள 80 கோடி மக்களும் மாதம் மாதம் ரேஷன் பொருட்கள் பெற்று வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்