ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல் : 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல் : 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டதில் உள்ளா ராணுவ முகாமிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த துப்பாக்கி சண்டையில் மூன்று ராணுவ வீரரகள் தங்களது உயிரினை தியாகம் செய்துள்ளனர். ராணுவ முகாமில் இருந்த மேலும் சில வீரர்கள் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்று அதிகாலை நடைபெற்ற இந்த தாக்குதலை அடுத்து எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்