நாளை காலை பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்

 நாளை காலை பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்

எஸ்.எஸ்.எல்.வி., என்ற புதிய வகை ராக்கெட், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து, நாளை காலை விண்ணில் ஏவப்படுகிறது.

'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது.

அதில் எஸ்.எஸ்.எல்.வி என்ற புதியவகை ராக்கெட் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏவுதளத்திலிருந்து நாளை காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது .

மேலும் இந்த ராக்கெட் இ.ஓ.எஸ் 02-என்ற பூமியைக் கண்காணிக்கக் கூடிய செயற்கைக்கோள் மற்றும் ஆசாதிசாட் என்ற பள்ளி மாணவியர்கள் உருவாக்கிய மென்பொருள்களைச் சுமந்து செல்கிறது.

Find Us Hereஇங்கே தேடவும்