12,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹிந்து கோவிலை பாகிஸ்தானிடமிருந்து மீட்பு

12,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹிந்து கோவிலை பாகிஸ்தானிடமிருந்து மீட்பு

பாகிஸ்தானில் 12,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவில் வழிபாட்டிற்காக  மீண்டும் திறக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள அனார்கலி பஜாரில் 12,000 ஆண்டுகளாக பழமை வாய்ந்த இந்துக்களின் புனித தலமான வால்மீகி கோயிலை  கிறிஸ்தவ குடும்பத்தினரிடம் இருந்து நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது.

அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிறிஸ்த்துவ குடும்பத்தினர் இந்து மதத்திற்கு மாறியதாக  கூறி கோவிலை ஆக்கிரமித்து அனுபவித்து வந்தன.மேலும் அந்த கோயில் வழிபாடு நடத்த யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை.

இதனால் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை பராமரிப்பதற்காக தன்னாட்சி அதிகாரம் உடைய சொத்து அறக்கட்டளை வாரியம் செயல்படுகிறது.  இந்த வாரியத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலை மீட்கும் முயற்சியில் இறங்கினர். கோயிலை ஆக்கிரமித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பின் வால்மீகி கோவில் சொத்து அறக்கட்டளை வாரியத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஹிந்துக்கள் வழிபாடு செய்ய அந்தக் கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோயிலை விரைவில் புனரமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Find Us Hereஇங்கே தேடவும்