பாம்பு கடித்து உயிரிழந்த அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற தம்பியும் பாம்பு கடித்ததில் உயிரிழப்பு...!

பாம்பு கடித்து உயிரிழந்த அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற தம்பியும் பாம்பு கடித்ததில் உயிரிழப்பு...!

பாம்பு கடித்து உயிரிழந்த அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற தம்பியும் பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில்  கோவிந்த் மிசாரா (22 வயது) என்ற நபர், தன்னுடைய சகோதரர் அரவிந்த்(38 வயது) இறுதிச்சடங்கில் பங்கேற்க பவானிபூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். 

கோவிந்த் மிசாராவின் அண்ணன் அரவிந்த் மிஸ்ரா கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாம்பு கடித்ததில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது கோவிந்த் மிசாராவையும் பாம்பு கடித்ததில் அவர் சம்பவம் இடத்திலேயே பலியானார்.

மேலும் அவருடன் வீட்டில் தங்கி இருந்த அவருடைய உறவுக்காரர் சந்திரசேகர்என்பவரையும் பாம்பு கடித்து விட்டு சென்றது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்