மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமரை இன்று சந்திக்கத் திட்டம்...!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமரை இன்று சந்திக்கத் திட்டம்...!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை இன்று சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நான்கு நாள் பயணமாக நேற்று (ஆகஸ்ட். 04) டெல்லி வந்துள்ளார்.

புதிதாக பொறுப்பேற்ற குடியரசுத்தலைவர் திரெளபதி மர்முவையும் மரியாதை நிமித்தமாக சந்திக்க மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மோடியை இன்று (ஆகஸ்ட். 05) அவர் சந்தித்துப் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 7ம் தேதி ஆயோக் நிர்வாகக் குழுவின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் விவசாயம், சுகாதாரம் பொருளாதாரம் போன்ற முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. இக்கூட்டத்திலும் மம்தா பானர்ஜி பங்கேற்கவுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்