உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரை

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரை

உச்சநீதிமன்றத்தின்அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார். 

நாட்டின் அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியில் உள்ளார். இவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26 - ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

இதனையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய சட்ட அமைச்சகம் இறங்கியுள்ளது. பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வதே வழக்கமான நடைமுறையாக உள்ளது. 

அதன்படி, தனக்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதி இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி யு.யு. லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார். 

இதன்படி யு.யு.லலித் 49 - வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என தெரிகிறது. புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள யு.யு லலித்தின் பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு குறைவாகவே இருக்கும். ஏனெனில் வரும் நவம்பர் 8 - ஆம் தேதியுடன் யு.யு. லலித் ஓய்வு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்