தந்தை விபத்திற்கு பிறகு சோமேட்டோவில் டெலிவரி செய்யும் 7 வயது சிறுவன்...!

தந்தை விபத்திற்கு பிறகு சோமேட்டோவில் டெலிவரி செய்யும் 7 வயது சிறுவன்...!

7 வயது சிறுவன் காலையில் பள்ளிக்கு சென்று மாலையில் சோமேட்டோ நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணி செய்து கொண்டிருக்கும் வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

7 வயது சிறுவனின் தந்தை ஒரு விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தை காப்பற்றுவதற்காக சோமேட்டோ டெலிவரி பாயாக பணியாற்றி வருகிறார்.

ராகுல் மிட்டல் என்ற ட்விட்டர் பயனாளி 7 வயது சிறுவன் தனது உணவை டெலிவரி செய்ய வந்த போது அவர் சிறுவனின் கதையை கேட்கிறார். அப்போது அந்த சிறுவன் தந்து தந்தை சமீபத்தில் விபத்துக்குள்ளாகி காலில் காயம் ஏற்பட்டு இருப்பதால் குடும்ப வருமானத்திற்காக தான் இந்த பணியை செய்து வருவதாக கூறியுள்ளார்.

பகலில் பள்ளிக்கு செல்வதாகவும், மாலை வீட்டுக்கு வந்தவுடன் 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் அந்த சிறுவன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ராகுல் மிட்டல் பகிர்ந்த இந்த வீடியோவில் அந்த சிறுவன் ஒரு கையில் உணவு பேக்கேஜ் உடன் இன்னொரு கையில் தொலைபேசி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. மாலை 6 முதல் இரவு 11 மணி வரை சைக்கிள் மூலமே சிறுவன் டெலிவரி செய்து வருவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதனை அடுத்து ராகுல் மிட்டல் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்ற இந்த சிறுவனை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி இந்த சிறுவனின் தந்தையின் கால் குணமாக நாம் அனைவரும் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ட்விட்டர் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். பலர் அந்த சிறுவனின் குடும்ப பொறுப்பு தன்மையை பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு சிலர் இந்த வயதில் அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட சோகத்தை நினைத்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும், பலர் அந்த சிறுவனின் தந்தையின் விவரங்களை தங்களுக்கு பகிருமாறும், தங்களால் முடிந்த உதவியை செய்கிறோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர். இந்த சிறுவனின் வீடியோவுக்கு சோமேட்டோ நிறுவனமும் ரெஸ்பான்ஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்