இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக மற்றும் கேரளாவை சேர்ந்த 12 பேரின் அசைவுகள் கண்காணிக்கப்படுகிறது.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக மற்றும் கேரளாவை சேர்ந்த 12 பேரின் அசைவுகள் கண்காணிக்கப்படுகிறது.
இலங்கையில் கடந்த 21ம் தேதி சர்ச், நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள் என்று 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறின. மனித வெடிகுண்டுகளும் செயல்பட்டன. இந்த தாக்குதலில்250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இலங்கை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தகுண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவன் சாஹ்ரான் ஹாசிம். இவன் தற்கொலை படை தாக்குதலில் பலியாதாக கூறப்படுகிறது.
இவனது செல்போனில் பதிவான எண்களை வைத்து யார் யாரிடம் தொடர்பு கொண்டுள்ளான் என்பது குறித்து டிராக்கிங் செய்யப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 12 பேரிடம் அதிக அளவில் தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது.
இதனை வைத்து அந்த 12 பேரின் அசைவுகளையும் இலங்கை பாதுகாப்பு படையினர் திவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்கிற தகவல் பரவி வருகிறது.