உலக அளவில் சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதில் ஈரான் முதலிடமும், சீனா இரண்டாவது இடமும் பிடித்துள்ளது.
உலக அளவில் சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதில் ஈரான் முதலிடமும், சீனா இரண்டாவது இடமும் பிடித்துள்ளது.
ஈரான் நாட்டின் சிராஸ் தெற்கு நகரை சேர்ந்தவர்கள் உறவினர்கள் மெஹ்தி சொராபிபர், அமின் சதாகத். இருவருக்கும் 15 வயது ஆகிறது. இவர்கள் கற்பழிப்பு வழக்கில் முறையான விசாரணையின்றி கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். இது சர்வதேச அளவில் பிரச்சனையாக எழுந்துள்ளது. சிறுவர்களாக இருப்பவர்களை முறையாக விசாரிக்காமல் மரண தண்டனை விதித்தது தவறு என்று சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இரு சிறுவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அவர்களது பெற்றோர் சந்தித்து சென்றுள்ளனர். ஆனால் தங்கள் பிள்ளைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது அவர்களுக்கு எந்த வித தகவலும் தெரிவிக்கவில்லை.
சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதில் ஈரான் முதல் இடத்தில் உள்ளது. 2ம் இடத்தை சீனா பிடித்துள்ளது. ஆண்டுக்கு ஆயிரம் சிறுவர்களுக்கு இதுபோன்று மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இது உலக அளவிலான புள்ளிவிவர கணக்காகும்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக ஒருநாளைக்கு 253 பேர் பிடிபட்டால் அதில் 7 பேராவது 18வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
இதுகுறித்து உரிமைக்குழு தெரிவிக்கையில் 90க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நிறைவேற்றப்படும் தண்டனை ரகசியமாக நடக்கிறது. உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவிப்பதில்லை.
இதுபோன்ற செயல்களை தடுக்க வேண்டும். சிறுவர்களுக்கு எதிரான மரண தண்டனையை முடிவுக்கு கொண்டு வர பொது தலையீடு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.