டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புது டெல்லியில் மத்திய அரசின் அலுவலகங்கள் அனைத்தும் அங்குள்ள சாஸ்திரி பவனில் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மத்திய அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அரசின் பல துறைகளின் முக்கிய ஆவணங்கள் சாஸ்திரி பவனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று பிற்பகல் சாஸ்திரி பவனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் இன்றும் தெளிவாக தெரியவில்லை.