சாதாரண மனிதர்களை விட பெரிய அளவில் பனி மனிதன் இருப்பான் என்று கூறப்படுகிறது.
இமயமலைப் பகுதிகளில் பனி மனிதன் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. சாதாரண மனிதர்களை விட பெரிய அளவில் பனி மனிதன் இருப்பான் என்று கூறப்படுகிறது. நேபாளத்தை ஒட்டிய பகுதிகளில் இவ்வகை உயிரினம் இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
எட்டி எனப்படும் அந்த பனிமனிதனை இராணுவ வீரர்கள் பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. தற்காலத்தில் அவர்கள் வசிப்பது சாத்தியமில்லை எனவும் ஒரு தரப்பினர் கூறி வந்தனர்.
இந்நிலையில் இந்திய இராணுவத்தின் ஒரு ட்வீட் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய இராணுவத்தினர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது, எட்டியின் கால்தடத்தை பார்த்ததாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 32 இன்ச் நீளமும், 15 இன்ச் அகலமும் கொண்ட கால்தடம் என தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு, மாகலு- பரூண் தேசிய பூங்காவிற்கு அருகில் இதுபோன்ற பனிமனிதர்களை பார்த்துள்ளதாகவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இது உண்மை கிடையாது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.