ஃபானி புயல் ஒடிசா கடற்கரையை நெருங்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அங்கு மீட்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஃபானி புயல் ஒடிசா கடற்கரையை நெருங்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அங்கு மீட்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவில் ஃபானி புயல் மையம் கொண்டுள்ளதாகவும், அடுத்த 36 மணி நேரத்தில் இந்த புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகரும் என்றும், ஒடிசா கடற்கரையை புயல் நெருங்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஒடிசா பகுதியில் கடற்படையினரும், மீட்புப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அரசு அலுவலர்களும் புயலை எதிர்கொள்வது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.