தன்னுடைய கள்ளக் காதலி, இன்னொரு வாலிபருடன் கள்ளக் காதல் செய்ததால், கள்ளக் காதலியை கத்தியால் குத்தி கள்ளக் காதலன் கொலை செய்தான்.
தன்னுடைய கள்ளக் காதலி, இன்னொரு வாலிபருடன் கள்ளக் காதல் செய்ததால், கள்ளக் காதலியை கத்தியால் குத்தி கள்ளக் காதலன் கொலை செய்தான்.
புதுச்சேரி குமரகுருபள்ளத்தை சேர்ந்தவர் கீதா. இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகளும் உள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரைப் பிரிந்து வாழ்கிறார்.
இந் நிலையில் இவருக்கும், தள்ளுவண்டி ஓட்டும் தொழிலாளியான ஆனந்துக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக் காதலாக மாறியது. இந் நிலையில் கீதாவை ஆனந்த் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தபோது, கீதாவுக்கும் வேறொருவருக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டதால், ஆத்திரத்தில் கீதாவை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறினார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.