மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு ஆதரவாக நாய் மூலம் பிரச்சாரம் செய்ததாக, நாயின் உரிமையாளர் மீது வழக்கு செய்யப்பட்டதுடன், அந்த நாயையும் தேர்தல் அதிகாரிகள் பிடித்துச்
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு ஆதரவாக நாய் மூலம் பிரச்சாரம் செய்ததாக, நாயின் உரிமையாளர் மீது வழக்கு செய்யப்பட்டதுடன், அந்த நாயையும் தேர்தல் அதிகாரிகள் பிடித்துச் சென்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்தபோது, பாஜகவுக்கு வாக்களித்து நாட்டை காப்பாற்றுங்கள் என்ற வாசகத்துடன் கூடிய பதாகை ஒன்றுடன் வீதியில் நாய் ஒன்று உலா வந்தது. இதனை கண்ட தேர்தல் அதிகாரிகள் அந்த நாயை பிடித்துச் சென்றனர்.
இந்நிலையில், அந்த நாயின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டு, அவர் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்தக் கூடாது என விதிமுறை மீறல் இருந்தும், அந்த விதியை மீறி நாய் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், சத்தீஸ்கர் மாநிலத்தில் எருமை மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.