ஹாலிவுட் நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான் கலிபோர்னியாவில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76.
ஹாலிவுட் நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான் கலிபோர்னியாவில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76.
அவர் “குட் பை குருயல் வோல்ட்”, “தி சூப்பர் நேச்சுரல்ஸ்”, “பிரின்ஸ் ஆப் டார்க்னஸ்” உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர், படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதையடுத்து, அவர் கலிபோர்னியாவில் தனது மகன் ஜேஸூடன் வசித்து வந்தார். அங்கு அந்த வீட்டில் நேற்று மரணம் அடைந்தார் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான்.
இதுதொடர்பாக பேசிய அவரது மகன் ஜேஸ், தனது தந்தை வலிமை வாய்ந்த புத்திசாலியான கருப்பு மனிதர் என்றார். தன்னை சிறந்த மகனாக விளக்க வேண்டும் என விரும்பியவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான் இயற்கையாக மரணம் அடைந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.