இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 9 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதில் பெண்கள், பர்தா அணிந்து கொண்டு தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இலங்கையின் வேறு பகுதிகளிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் வகையில், மக்களின் நலன் கருதி, ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா. பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால் அங்கு உள்ள முஸ்லீம் பெண்களுக்கு பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களை எளிதாக அடையாளம் காணும் வகையிலும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பர்தாவுக்கு தடை விதித்துள்ள ஐரோப்பா மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.