அசாமில் பெருவெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து முதல்வர் ஆறுதல்...!

அசாமில் பெருவெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து முதல்வர் ஆறுதல்...!

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அசாமில் பெய்து வரும் தொடர் மழையால் ஒரு வாரத்துக்கும் மேலாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் 32 மாவட்டங்களை சேர்ந்த 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதித்துள்ள பஜாலி மாவட்டத்தை நேற்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேரில் பார்வையிட்டார். முழங்கால் அளவு பெருகியுள்ள வெள்ள நீரில் சென்ற முதல்வர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சில நிவாரண முகாம்களையும் பார்வையிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களியிடம் சேதமடைந்த வீடுகளை புனரமைக்க அரசு உதவி செய்யும் என்று உறுதியளித்தார். 

இதனைதொடர்ந்து பஜாலி, பபானிபூரில் உள்ள சரல்பரா நயபராவில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட முதல்வர் பகுமாரா ஆற்றின் கரையை பலப்படுத்தவும், அதன் மீது சாலை அமைக்கவும் ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களில் பட்டியல்களை தயார் செய்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் எனவும் தெரிவித்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்