மும்பை அருகே கடலில் விழுந்த ஹெலிகாப்டர்...!

மும்பை அருகே கடலில் விழுந்த ஹெலிகாப்டர்...!

மும்பை அருகே கடலில் ஹெலிகாப்டர் விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய எண்ணெய் கழக நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

மும்பையிலிருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான துரப்பண மேடைக்கு அருகே விபத்து நேரிட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் 2 விமானிகள் உள்பட 7 பேர் இருந்த நிலையில் கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் அனைவரும் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் 4 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் மேலும், மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்