நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 முதல் தடை...!

நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 முதல் தடை...!

நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகம் மற்றும் விற்பனை செய்ய ஜூலை முதல் தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிளாஸ்டிக்கால் ஆன மிட்டாய் குச்சி, தட்டு, கப், ஸ்டிரா உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்