கிருஷ்ணா நதிநீரை தற்காலிகமாக நிறுத்த ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்..!

கிருஷ்ணா நதிநீரை தற்காலிகமாக நிறுத்த ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்..!

கிருஷ்ணா நதிநீரை தற்காலிகமாக நிறுத்துமாறு ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல் உள்ளிட்ட ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் கிருஷ்ணா நதியில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து தற்காலிகமாக நிறுத்துமாறு ஆந்திர மாநில அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

மேற்கொண்டு நீரை தேக்க வசதியில்லை என அக்கடிதத்தில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

சென்னை பெருநகருக்கு, அடுத்த எட்டு அல்லது ஒன்பது மாதத்திற்கு தேவையான தண்ணீர் தற்போது இருப்பு உள்ளதாகவும் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Find Us Hereஇங்கே தேடவும்