அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் இணைய 4 நாள்களில் 94,281 பேர் விண்ணப்பம்...!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் இணைய 4 நாள்களில் 94,281 பேர் விண்ணப்பம்...!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர்வதற்கு 4 நாள்களில் 94 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான  தேர்வு ஜூலை 24ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்நிலையில்  4 ஆண்டுகள் ரணுவ சேவைக்குப் பிறகு அக்னி வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாக மத்திய அரசின் அமைச்சகங்களும், துணை ராணுவப் படைகளும் வாக்குறுதி அளித்துள்ளன. 

இதேபோல் மாநில காவல் துறையில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும் வாக்குறுதி அளித்துள்ளன.

Find Us Hereஇங்கே தேடவும்