ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கம் .- மத்திய அமைச்சகம் ஏற்பாடு

ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கம் .- மத்திய அமைச்சகம் ஏற்பாடு

நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கத்தை மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . அக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கத்தை மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது .

அந்த வகையில் அதற்கான முன்னேற்பாடுகளாக  வருகிற ஆகஸ்ட் மாதம் 11 முதல் 17ஆம் தேதிவரை விடுதலை வாரவிழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி நாடுமுழுவதும் சுமார் 26 கோடி வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போதிய அளவிற்கு தேசியக்கொடியைத் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது .

இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக , 75 நாள்களில் 75 கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார் என்ற தகவல் வெளிவந்தது . ஆகவே  நாட்டின் 75 -ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் அனைவருக்கும் மிகப்பெரிய நெகிழ்வை ஏற்படுத்தும் .

Find Us Hereஇங்கே தேடவும்