பிச்சை எடுத்த பட்டதாரி ஆசிரியர் - 25 ஆண்டுகளுக்கு பிறகு கனவு நிறைவேறியது

பிச்சை எடுத்த பட்டதாரி ஆசிரியர் - 25 ஆண்டுகளுக்கு பிறகு கனவு நிறைவேறியது

25 ஆண்டுகளுக்கு முன்பு பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதியவர், தேர்வு முடிவு வெளியாகாததால் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில், 25 வருடங்களுக்கு பிறகு நீதிமன்றம் அவரை ஆசிரியர் பணியில் சேர தீர்ப்பளித்துள்ளது.

ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில 25 ஆண்டுகளுக்கு முன்பு பட்டதாரி  ஆசிரியர் தேர்வு எழுதியவர் கேதாரேஸ்வர ராவ். சில காரணங்களால் மாநில அரசு அந்த தேர்வு முடிவை நிறுத்தி வைத்தது. 

இதனை தொடர்ந்து கேதாரேஸ்வர ராவ் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்தார். அதன் பிறகு வீட்டில் நெசவு செய்யும் கைத்தறி துணிகளை விற்று பிழைப்பு நடத்தினார். 

அந்த வியாபாரமும் காலப்போக்கில் முடங்கிவிட, பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தினார். இப்பொழுது 25 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் ராவிற்கு சாதகமாக ஆசிரியர் பணியில் சேரச் சொல்லி தீர்ப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த தீர்ப்பை ஒட்டி, அவரை அந்த கிராமத்து மக்கள் தேடிக் கண்டுபிடித்து பேண்ட் சட்டை தைத்து கொடுத்து வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இப்பொழுது கேதாரேஸ்வர ராவிற்கு வயது 55. 

இந்த நிலையில் இனி உதவாது என்று தூக்கி போட்டு விட்ட அவரது சான்றிதழ்கள் நைந்து போயிருக்கிறது. ஒரு வேளை சர்டிபிகேட் வெரிபிகேஷன் கேட்டால் என்ன செய்வது  எப்படி சமாளிப்பது என்று சிலர் கேட்க, அவர் சிரித்து கொண்டே, நீதிமன்றத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது  பார்த்துக்கலாம்! என்கிறார்  கேதேஸ்வர ராவ்

Find Us Hereஇங்கே தேடவும்